மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துங்கள் – அனைத்து அரச நிறுவனங்களிடமும் உள்ளூராட்சி அமைச்சு வலியுறுத்து !
Sunday, February 20th, 2022
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் வேண்டுகோளின்பேரில் இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ரத்னசிறி தெரிவித்துள்ளார்..
அதன்படி, குளிரூட்டிகள் (ஏ/சி) மற்றும் தேவையற்ற விளக்குகள் நிறுவனங்களின் பயன்பாட்டை முடிந்தவரை குறைக்குமாறு அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசியமற்ற பயணங்களுக்கு எரிபொருளை பயன்படுத்த வேண்டாம் என அரச நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன.
கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கு வெளிமாவட்டங்களிலிருந்து அதிகாரிகளை கொழும்புக்கு வரவழைப்பதற்காக அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவது ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரத்னசிறி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106