உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப கிளர்ச்சியாளர்கள் திட்டம்!
Saturday, February 19th, 2022
உக்ரைனின் கிழக்கு பகுதியில் செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை ரஸ்யாவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கிளர்ச்சிக்காரர்கள் பிரகடனம் செய்துள்ள டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின் தலைவர் டெனிஸ் புஸ்லின் சமூக ஊடகங்களில் இதனை அறிவித்துள்ளதுடன் ரஸ்யா தனது நாட்டிற்கு வருபவர்களிற்கு இடமளிக்க தயார் என தெரிவித்துள்ளார்.
பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் முதலில் ரஸ்யாவிற்கு அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
லுகான்ஸ் பிராந்தியத்தில் செயற்படும் கிளர்ச்சிக்காரர்களும் இதேஅறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைனின் கிழக்கில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் மில்லியன் கணக்காண மக்கள் வாழ்கின்றனர்.
இவர்களில் அனேகமானவர்கள் ரஸ்ய மொழி பேசுபவர்கள் என்பதுடன் ரஸ்யா அவர்களிற்கு பிரஜாவுரிமை வழங்க முன்வந்துள்ளது.
இந்த எதிர்பாராத திருப்பத்தை உக்ரைன் மீதான முழுமையான தாக்குதலை நியாயப்படுத்துவதற்கான ரஸ்யாவின் நடவடிக்கை என மேற்குலக நாடுகள் தெரிவித்துள்ளன.
பல வருடங்களின் பின்னர் முதல்தடவையாக இன்றே கிழக்கு உக்ரைனில் கடுமையான ஆட்டிலறி தாக்குதல்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106