சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது – அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவிப்பு!
Friday, February 18th, 2022
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண சர்வதேச நாணய நிதியத்தை நாடும் நோக்கம் அரசாங்கத்திற்கு கிடையாது என காணி விவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார ரீதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம்.
நெருக்கடியான நிலைமையை சீர்செய்ய அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. மாற்று வழிமுறைமை ஊடாக தற்போதைய நிலைமையினை சமாளிக்க முடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் உத்தியோகப்பூர்வமாக அறிவுறுத்தியுள்ளார்.
தற்காலிக பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கு கிடையாது.
அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் ஒரு பொறிமுறையாக சர்வதேச நாணய நிதியம் காணப்படுகிறதால் ஐக்கியதேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தொடர்ந்து நாணய நிதியத்தை நாடுமாறு வலியுறுத்துகிறார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் அது அரச ஊழியர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் அரச செயலொழுங்கிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை பெரும்பாலான அமைச்சர்கள் அமைச்சரவையின் போது எடுத்துரைத்துள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106