மக்கள் பிரச்சனைகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் விவாதிக்கப்படும் – வடக்கின் ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவிப்பு!
Thursday, February 17th, 2022
வடக்கு மாகாணத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் துறைசார்ந்த அதிகாரிகள் மற்றும் சமூக அமைப்புகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
வடமாகாண மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சிவில், துறைசார் குழுக்களுடன் குறித்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு வழங்கிய முறைப்பாடுகள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையுடன் மக்கள் மத்தியில் குறித்த விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட உள்ளது.
சமைத்த உணவின் விலை, தொழில்முனைவோர், கூட்டுறவுச் சங்கங்களை ஊக்குவித்தல், பண்ணை விலை மற்றும் காய்கறிகளின் சில்லறை விலை, விவசாயிகளுக்கான செலவுகள், விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்கள், அத்தியாவசிய உள்ளீடுகளின் செலவுகள், விவசாய சேவைகள் துறை, வட மாகாண விவசாய அமைச்சகத்தின் திட்டங்கள், படகுகள் பழுது, நிதியுதவி, நங்கூரம், குளிர்பதனம், தொழில், திட்டங்கள் ஆகியவை குறித்து வெளிப்படையாக விவாதிக்கப்பட்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106