ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் பிரச்சினையை பார்க்க்கவேண்டும் – ஜெனீவா அமர்வில் தென்னாபிரிக்காவின் ஆதரவை கோரியது இலங்கை!
Wednesday, February 16th, 2022
எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது.
அதனடிப்படையில் தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா சிம்பாப்வே மலாவி உட்பட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிதரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறைகளை விட உள்நாட்டு மோதல்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேநேரம் வெளித்தரப்பினரின் ஈடுபாடுகள் தீர்வை காண்பதற்கு பதில் இனவிவகாரங்களை மேலும் குழப்பகரமானதாக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மோதலின் பின்னர் இலங்கை அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்குவதற்காக அனைத்தையும் செய்துள்ளது என தெரிவித்துள்ள தூதுவர் தேவையற்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அரசாங்கம் தன்னிடம் உள்ள சிறியஅளவு வளங்களை தியாகம் செய்வதற்கும் தற்பாதுகாப்பு நிலையில் செயற்படுவதற்கும் தள்ளப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சர்வதேச தரப்பினர் தமிழர் விவகாரங்களில் நேர்மையான அக்கறை கொண்டிருந்தால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களிற்கு நிவாரணத்தை வழங்கும் அரசாங்கத்தின் முயற்சிகளிற்கு உதவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சம்மந்தப்பட்ட தரப்பினர் தங்களின் தவறுகளை திருத்திக்கொள்ளாவிட்டால் பொறுப்புக்கூறல் என்பது அர்த்தமற்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆதாரமற்ற இட்டுக்கட்டப்பட்ட கதைகளில் தங்கியிருக்காமல் பரந்த கண்ணோட்டத்தில் இந்த பிரச்சினையை பார்க்குமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106