மின்சார துண்டிப்பு தொடர்பில் நாளை தீர்மானம் – பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை!
Monday, February 14th, 2022
நாளாந்தம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் நாளை செவ்வாய்க்கிழமை 15 ஆம் திகதி பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதியை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிப்பதில் எதிர்நோக்கியுள்ள சிக்கல் நிலைமை காரணமாகவே இலங்கை மின்சார சபை இந்த கோரிக்கையினை கோரவுள்ளது.
நிலவும் வறட்சியான காலநிலையினால் நீர் மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இலங்கை மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் அன்ரூ நவமணி குறிப்பிட்டார்.
எரிபொருள் பற்றாக்குறையினால் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் கடந்த 2 ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எரிபொருள் இன்மையினால் மத்துமக உற்பத்தி நிலையத்தின் நடவடிக்கைகளும் நேற்றுமுன்தினம் இரவுமுதல் மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளது.
270 மெகா வோல்ட். மின்உற்பத்தி செய்யும் வெஸ்ட் கோஸ்ட் மின்உற்பத்தி நிலைய பணிகளும் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்தது. இந்த நிலையில் மின்வெட்டு அமுல்படுத்துவது குறித்து ஆராயப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106