இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்முதல் : நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவிப்பு!
Monday, February 14th, 2022
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அறுவடைப் பருவக் காலத்தில் இதுவரை 31 ஆயிரத்து 600 மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களி லிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவரான நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே ஒரு கிலோகிராம் நாட்டு நெல் 90 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோகிராம் 92 ரூபாவுக்கும், கீரி சம்பா 95 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நெல் சந்தைப்படுத்தல் சபையின் கிளைகளுக்கு நெல் கொண்டு வரப்பட்டால் ஒரு கிலோகிராமுக்கு 2 ரூபா மேலதிகமாக வழங்கப்படும் என்றும் அவர்ட தெரிவித்துள்ளார்.
அதன்படி ஒரு கிலோ நாட்டு நெல் 92 ரூபாவுக்கும் ஒரு கிலோ சம்பா நெல் 94 ரூபாவுக்கும் கீரி சம்பா 97 ரூபாவுக்கும் கொள்முதல் செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106