அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் தொடர்பான விசேட குழு முதல் தடவையாக கூடுகிறது!
Friday, February 11th, 2022
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை, தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு முதல் முறையாக இன்று கூடவுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில், அந்த அமைச்சில் குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைத் தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் நியமிக்கப்பட்டது.
உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைச் சந்தைக்கு விநியோகிப்பது தொடர்பில் முறையான பொறிமுறையொன்று உடனடியாகத் தயாரிக்கப்பட வேண்டுமென்று ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மக்களின் தேவைகள் பூர்த்தியடையும் வகையிலான நடவடிக்கைகளுடன் ஒன்றிணையுங்கள் பொறியியலாளர்களுக்கு ஜனாதிப...
தீவிரமடையும் சூறாவளி இலங்கையை தாக்கும்! சிவப்பு எச்சரிக்கை!
கல்வித்துறை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கொரோனாவைத் தடையாகக் கொள்ள வேண்டாம் – ஜனாதிபதி வலியுறுத்...
|
|
|


