மக்களின் புரிதலுக்காக சுகாதாரத்துறை பணியாளர்களின் மாதாந்த வருமானம் தொடர்பில் முழுப்பக்க விளம்பரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் – சுகாதார அமைச்சர் அறிவிப்பு!
Friday, February 11th, 2022
சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான விபரங்கள் பத்திரிகைகளில் முழுப் பக்கமாக வெளியிடப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்த நாள்களில் சுகாதார நிபுணர்கள் செய்துவரும் பணிகள் குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
இதன்போது அவர் மேலும் கூறுகையில் – அடுத்த சில நாட்களில் தற்போது சுகாதாரத்துறையில் இருப்பவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரம் வரும். அப்போது எல்லோருக்கும் இவர்களின் சம்பளம் பற்றிய ஒரு புரிதல் கிடைக்கும்.
சராசரி தாதி சுமார் 400 மணி நேரம் கூடுதல் நேரம் வேலை செய்கிறார். 150 மணி நேரம் எடுத்துக் கொண்டால், மூன்றாம் தர தாதி ஒருவருக்கு சாதாரணமாக ஒரு இலட்சத்து 2,000 ரூபாவும்முதல் தர தாதி ஒருவருக்கு ஒரு இலட்சத்து 80 ஆயிரம் ரூபாவும் செலவாகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106