ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை வவுனியா விஜயம் – வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வு நாளை!

Thursday, February 10th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாளை (11) வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். வவுனியா, பம்பைமடு பகுதியில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் அங்குராப்பண நிகழ்வுக்கே அவர் விஜயம் செய்யவுள்ளார்.

வவுனியா பல்கலைக்கழகமானது 1991 ஆம் ஆண்டு வட மாகாணம் இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு, 1997 ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது.

கடந்த ஒகஸ்ட் முதலாம் திகதி முதல் இலங்கையின் 17 ஆவது பல்கலைக்கழகமாக இது தரமுயர்த்தப்பட்டிருந்தது.

இதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அங்குராப்பணம் செய்து வைப்பதற்காக ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார்.

இதன்போது முன்அனுமதி பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட அளவிலானவர்களுக்கு மட்டுமே நிகழ்வில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106