பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிப்பு!

Sunday, August 21st, 2016

இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்திற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்திற்கான செஸ் வரி 25 ரூபாவிலிருந்து 40 ரூபாவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருனாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவு முதல் புதிய செஸ் வரித் திருத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இறக்கமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதால் உள்நாட்டில்உற்பத்தி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கு அமைய இறக்குமதி செய்யப்படும்பெரிய வெங்காயத்திற்கான செஸ் வரியை அதிகரிக்குமாறு அதிகாரிகளிடம் பல தடவைகள் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஆகஸ்ட் மாதம்முதல் இருந்து மின்சார கட்டணம் 69 வீதத்தால் அதிகரிக்க வாய்ப்பு - பொதுப் பயன்பாட்டு ஆணைக்க...
அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் பாதுகாப்பு தொடர...
இந்தோனேசியாவில் 10 ஆவது உலக நீர் உச்சி மாநாடு - உயர்மட்டக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பயணிக்கின்றார்...

ஏப்ரல் 21 தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றால் சலுகை – முன்னாள் ஜனாதிபதி மைத்திரியின் திட்டம் அம்பலம்!
ஜூனில் கோவிட் இறப்புகள் கணிசமாக அதிகரித்ததற்கான காரணத்தை அறிய சிறப்புக் குழு நியமிப்பு - சுகாதார சேவ...
இலங்கையில் அனைத்து இன மக்களும் சம உரிமைகளுடன் வாழ்வதற்கான இந்தியாவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் – ...