கடந்த 2 ஆண்டுகளில் முகக் கவசம் கொள்வனவு செய்ய இலங்கை மக்களால் 18 ஆயிரம் கோடி செலவு!
Wednesday, February 9th, 2022
கொரோனா பெருந்தொற்று நிலைமைகளின் காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியில் பெருந்தொகை பணத்தை முகக்கவசம் கொள்வனவு செய்ய செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியில் முகக் கவசங்களை கொள்வனவு செய்வதற்காக சுமார் 18 ஆயிரம் கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளனர்.
நுகர்வோர் விவகார அமைச்சின் சிரேஸ்ட அதிகாரியொருவர் இந்த தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, நாள் ஒன்றுக்கு முகக் கவசம் கொள்வனவு செய்வதற்காக 25 கோடி ரூபாவினை மக்கள் செலவிடுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ள நிலையில் பெருந்தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் நாளாந்தம் முகக் கவசம் கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.
எனவே முகக் கவசங்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதன் மூலம் மக்களின் சுமையை குறைக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106