எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை – அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவிப்பு!
Tuesday, February 8th, 2022
எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி எடுத்த தீர்மானத்துடன் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் தீர்மானம் எடுக்க வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் –
எவ்வாறாயினும், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அரசாங்கத்திலோ அல்லது அமைச்சரவையிலோ இதுவரையில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை.
பெற்றோல் மற்றும் டீசல் விலையை அதிகரிப்பதற்கு எல்ஓசி நிறுவனம் அண்மையில் நடவடிக்கை எடுத்தது.
எனினும், பெற்றோலிய கூட்டுத்தாபனம் விலையை அதிகரிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதேவேளை நிதியமைச்சு, மத்திய வங்கி மற்றும் சுங்கத் திணைக்களம் ஆகியவற்றுக்கு சிமெந்து தட்டுப்பாட்டைப் போக்க தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக ஆரம்பிக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுட்டிக்காட்டிய அமைச்சர், திட்டங்களை ஆரம்பிக்கும் முதல் கட்டத்தில் சிமெந்து அவசியமில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106