தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனம் குறித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி ஆலோசனை!
Tuesday, February 8th, 2022
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் நியமனத்தில் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதா என்பதை கண்டறியுய கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர்கள் நியமனத்தின் போது, விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகத் தேர்வு மற்றும் அதன் பின்னரான தேர்வுகள் இடம்பெற்றன.
இதன்போது அரச சேவை அல்லது கல்விச் சேவை ஆணைக்குழுக்களுக்கு விண்ணப்பதாரிகளினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்தன.
இந்நிலையில் உண்மையில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டனவா என்பது தொடர்பாக கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு, ஜனாதிபதி கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பொலிஸ் அதிகாரிகள் 72 பேருக்கு இடமாற்றம்!
குடாநாட்டில் மரவள்ளிக்கு பெரும் கிராக்கி!
விலை அதிகரிப்பு: தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் – எச்சரிக்கும் இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்...
|
|
|


