விலை அதிகரிப்பு: தரம் குறைந்த பொருட்கள் சந்தையில் – எச்சரிக்கும் இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

Tuesday, March 3rd, 2020

மிளகாய்தூள் உள்ளிட்ட பலசரக்கு பொருட்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் தரங்குறைந்த பாவனைக்கு உதவாத உற்பத்திகள் சந்தையில் விற்பனை செய்யும் செயற்பாடு அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கத்தின் செயலாளர் மகிந்த பாலசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

மாத்தறை, கொழும்பு, கம்பஹா, குருநாகல் ஆகிய மாவட்டங்களில் இரசாயன நிறங்கள் பயன்படுத்தி சோளம் மற்றும் தரங்குறைந்த மிளகுதூள்களை பயன்படுத்தி மிளகாய்தூள் உற்பத்தி செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பெப்ரவரி மாதம் மாத்திரம் பாவனைக்கு உதவாத இரண்டாயிரம் கிலோ கிராம் மிளகாய் மற்றும் பலசரக்கு தூள்கள் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது மீட்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பண்டிகை காலங்களில் இந்த நிலைமை மேலும் அதிகரிக்க என்பதுடன் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் பொது மக்களை கோரியுள்ளார்.

Related posts:


இலங்கையில் டெல்டா வைரஸ் காற்றின் ஊடாக பரவக்கூடிய சாத்தியம் - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்க...
மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் - அம...
சுமந்திரன எம்.பியை தோற்கடித்து இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரானார் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன்!