போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள் நிர்ணயம் – இலங்கை போத்தல் குடிநீர் சங்கம் அறிவிப்பு!
Monday, February 7th, 2022
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான புதிய விலைகள், இலங்கை போத்தல் குடிநீர் சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 500 மில்லிலீற்றருக்கான விலை 50 ரூபாவாகவும், ஒரு லீற்றருக்கான விலை 70 ரூபாவாகவும், 1.5 லீற்றருக்கான விலை 90 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, 5 லீற்றர் போத்தல் குடிநீரின் விலை 200 ரூபாவாகவும், 7 லீற்றருக்கான விலை 240 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீருக்கான கட்டுப்பாட்டு விலைகள், அண்மையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நீக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், போத்தல் குடிநீருக்கான புதிய விலைகளை போத்தல் குடிநீர் சங்கம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் - பிரதமர்
பரீட்சை நிலையங்களில் டெங்கு ஒழிப்பு புகை விசிறும் பணிகள்!
அதானி நிறுவனத்திற்கு அமைச்சரவை வழங்கிய அனுமதியை செல்லுப்படியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அ...
|
|
|


