காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி எல்லைதாண்டிய இந்தியப் படகுகள் ஏல விற்பனை!
Monday, February 7th, 2022
யாழ்ப்பாணம் காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருதொகுதி இந்தியப் படகுகள் இன்றையதினம் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
இதன்போது 88 அடி நீளமான மீன்பிடிப் படகொன்று அதிக தொகையாக 13 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.
கொழும்பில் இருந்து வந்த கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள தலைமையக அதிகாரிகள் குழு காரைநகரில் ஏலத்தில் விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன்,
இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக அதிகமனோர் பார்வையிட்ட நிலையில் இன்றைய தினமும் பலரும் பார்வையிட்டனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தவர்கள் ஏலத்தில் ஆரம்ப வைப்பு தொகையாக 1,000 ரூபாய் பணத்தை செலுத்தி ஏலத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
இலங்கையின் 5 துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களிற்குச் சொந்தமான மீன்பிடிப் படகுகள் இன்றுமுதல் 5 இடங்களில் ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106