அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது – மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே அறிவிப்பு!
Saturday, February 5th, 2022
குறைந்த மின்சாரக் கேள்வி நிலவுமாயின், இன்றையதினத்திலும், தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க முடியும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் விடுமுறை நாள் என்பதால், குறைந்த மின்சாரக் கேள்வி நிலவியமையால், மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
எவ்வாறிருப்பினும், இன்றையதினமும் சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக பத்தள மின்னுற்பத்தி நிலையங்களுக்கு உலை எண்ணெய் அவசியமாகும் என மின்சார சபையின் பேச்சாளரான, மேலதிக பொது முகாமையாளர் அண்ட்ரூ நவமணி தெரிவித்தார்.
தற்போது எரிபொருள் இன்மையால் செயலிழந்துள்ள களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்திற்கு எரிபொருளை வழங்குவதற்கு மேலும் சில நாட்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தேசிய மின் கட்டமைப்புக்கு 280 மெகாவோட் மின்சாரம் கிடைக்காமல் போயுள்ளது.
இதேவேளை, கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்காமையானது, பிரச்சினையானதாகும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
கால அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் தங்களுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாது என்றும் அவர் தெரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106