கிழக்கு மாகாண அமைச்சு செயலாளர்கள் திடீர் மாற்றம்!
Wednesday, February 2nd, 2022
மாகாண அமைச்சுகளின் செயலாளர்களிடையே கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் மாற்றத்தைச் செய்துள்ளார்.
அதற்கான இடமாற்ற கடிதங்கள் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத்தினால் நேற்றிரவு வழங்கி வைக்கப்பட்டது.
இதனடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக திருமதி கலாமதி பத்மராஜா, மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக கலாநிதி எம்.கோபாலரத்னம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக திருமதி ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்காவும், கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஜ.கே.ஜீ.முத்துபண்டாவும், கிழக்கு மாகாண பேரவையின் செயலாளராக எம்.வை.சலீமும், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஏ.எச்.எம்.அன்ஸாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனினும் மாகாண பிரதம செயலாளர் பதவி தொடர்ந்து வெற்றிடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106