கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசியே அவசியம் – முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவிப்பு!

Tuesday, February 1st, 2022

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த தடுப்பூசி நடவடிக்கையே அவசியம் என்பதனால் முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக முடக்க கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படுமா இல்லையா என்பது தொடர்பாக கருத்து கூறுகையிலேயெ இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கான முக்கியத்துவம் குறித்து தற்போது நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும் ஓமிக்ரோன் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த சில தடைகளை மீண்டும் அறிமுகப்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் 124 நாட்களுக்குப் பின்னர் முதன்முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,000 க்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106