மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்க யோசனை – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவிப்பு!

Tuesday, February 1st, 2022

அரச ஊழியர்கள் மற்றும் அரச துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு மாதாந்தம் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை தனியார் துறை ஊழியர்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்காக தொழில்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார்.

இது சம்பந்தமாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சரவைக்கு யோசனை ஒன்றையும் முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்காக, தனியார் பிரிவின் தொழில் சங்க பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த கொடுப்பனவைப் பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற் சங்கத்தினர் சம்மதம் தெரிவித்துள்ள போதிலும், தனியார் பிரிவின் முதலாளிமார்கள் இதுவரை சம்மதிக்கவில்லை எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அமைச்சரவைக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106