சிறுபான்மை கட்சிகளுடன் அரசாங்கம் விரைவில் சந்திக்க ஏற்பாடு – நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!
Monday, January 31st, 2022
சிறுபான்மை கட்சிகளை சந்தித்து அரசாங்கம் விரைவில் கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த கலந்துரையாடலில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய வடக்கு – கிழக்கு கட்சிகளுக்கும், முஸ்லிம் மற்றும் மலையக கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படவுள்ளது.
தற்போது நிலவும் அரசியல் பிரச்சினைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் குறித்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்படுவதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அனர்த்தத்தை எதிர்கொள்ளும் பகுதிகளை வரைபடமாக்கும் பணிகள் காலியில் ஆரம்பம்
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு - வர்த்தக சங்கம் வெளியிட்ட தகவல்!
பாடசாலை சத்துணவு திட்டம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானவை - கல்வி அமைச்சு அறிவிப்பு!
|
|
|


