மாங்குளத்தில் கோர விபத்து – மூவர் உயிரிழப்பு! .
Wednesday, June 26th, 2024
மாங்குளம் – பனிச்சங்குளம் பகுதியில் நேற்றிரவு (25) ஏற்பட்ட வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றின் மீது பாரவூர்தியொன்று மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீதி அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது பின்னால் பயணித்த பாரவூர்தி மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வேன் – ஜனாதிபதி!
இந்தியாவில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்கள் தொடர்பில் இந்தியப் பாதுகாப்புப் படையினர் இதுவரை எந்தத் த...
மக்களை அச்சுறுத்தும் மூளாய் - பொன்னாலை வீதி - திருத்தி தருமாறு மக்கள் அவசர கோரிக்கை!
|
|
|


