இலங்கையின் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிக்கு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தி!
Saturday, January 29th, 2022
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி ஏற்றும் பணி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
இந்நிலையில் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இது தொடர்பில் நாம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்ப்பதற்கு இது சிறந்த சந்தர்ப்பமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில் -, கர்ப்பிணி தாய்மார் மற்றும் சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் பணியில் உயர் நிலையை கொண்ட நாடாக இலங்கை விளங்குகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இதுவரையில் பொதுமக்களின் 60 வீதமானோருக்கு 2 தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன.ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக் கொண்டவர்ளின் எண்ணிக்கை 70 வீதமாகும். 3 தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்கள் 50 வீதம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி ஏற்றும் திட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு பிரதேச மட்டத்திலும், சுகாதார அதிகாரி பிரிவுகளிலும் இது தொடர்பான நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சில் அமைச்சரின் தலைமையில் எளிமையான வைபவம் ஒன்று நடைபெற இருப்பதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106