தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் தொடர்பில் சுகாதார தரப்பினருக்கு உடன் தெரிவிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்து!

Saturday, January 22nd, 2022

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் அனைத்து பக்க விளைவுகளையும் பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி அல்லது சுகாதார அமைச்சிற்கு தெரிவிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும், இவ்வாறான சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்கு உரிய அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கை வழங்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை காய்ச்சல் போன்ற லேசான பக்கவிளைவுகள் மாத்திரமே  பதிவாகியுள்ளது. கடுமையான உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்களுக்கு தடுப்பூசியை வழங்குவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எந்தவொரு தீவிரமான நோய்களுக்கும் சிகிச்சை அளிப்பதற்கு தேவையான மருத்துவப் பணியாளர்களை நியமித்துள்ளதாகவும், எனவே தடுப்பூசி போடுவது தொடர்பில் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே இலங்கையில், மீண்டும் ஒரு கொரோனா அலையைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106