விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை – சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்துரைப்பு!
Friday, January 21st, 2022
சட்ட விரோதச் செயற்பாடுகளின் காரணமாக கடந்த ஒரு வருடத்தினுள் ஐந்து கொலைகள் இடம்பெற்ற பரந்தன், சிவபுரம் கிராம மக்களின் சமூகப் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது, அண்மைக்காலத்தில் இடம்பெற்ற கொலை தொடர்பான விசாரணைகள் தமக்கு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என்று பிரதேச மக்களினால் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சிவபுரம் கிராமத்தில் பொலிஸ் காவலரண் அமைப்பதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்ட அமைச்சர், சந்தேக நபர்கள் விரைவில் கைது செய்து விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதேச பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு ஆலோசனை வழங்கினார்.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் கலந்து கொண்டிருந்தார்
Related posts:
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை: நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு டக்ளஸ் தேவான...
எமது மக்கள் போராட்ட அடிமைகளல்ல - சபையில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!
13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்ப்படுத்தப்பட வேண்டும் - பிரதமர் ரணிலுக்கு அமைச்சர் டக்ளஸ் எட...
|
|
|
அரசியல் உரிமை அபிவிருத்தி அன்றாடப் பிரச்சினை அனைத்திற்கும் தீர்வு: அணி திரளுமாறு முல்லை மண்ணில் அமைச...
மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
நாவற்குழியில் தனியார் முதலீட்டாளர்களினால் உருவாக்கப்படும் ஏற்றுமதித் தரத்திலான கடலுணவு பதனிடும் நிலை...


