25 ஆம் திகதியின் பின்னர் சிமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு – சிமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் அறிவிப்பு!

Thursday, January 20th, 2022

எதிர்வரும் 25 ஆம் திகதியின் பின்னர் சிமெந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கப்பெறும் என சிமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் நேற்றையதினம் 6 லட்சம் சிமெந்து மூடைகளை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இந்தோனேசியாவிலிருந்து வந்த கப்பலில் 2 இலட்சம் சிமெந்து மூடைகளும், பாகிஸ்தானிலிருந்து வந்த கப்பலில் 4 இலட்சம் சிமெந்து மூடைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, அந்த சிமெந்து மூடைகள் துறைமுகத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் சந்தைகளுக்கு விநியோகிக்கப்படவுள்ளதாகவும் சீமெந்து இறக்குமதி மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தைகளில் தற்போது சிமெந்து மூடை ஒன்றின் விலை 1375 ரூபாவாக காணப்படுகின்றது. எனினும், 1500 ரூபாவிற்கும் அதிக விலைகளிலே சிமெந்து மூடைகள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில விற்பனையாளர்கள் மணல் அல்லது ஏதேனும் கட்டுமான பொருட்களை கொள்வனவு செய்தால் மாத்திரமே சிமெந்தை தருவதாகவும் பாவனையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106