சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடல்!

Wednesday, January 19th, 2022

தெஹிவளைப் பிரதேசத்தினை சேர்ந்த சுழியோடி முறையை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

சுழியோடிச் சென்று ஒரு வகை துப்பாக்கியை பயன்படுத்தி மீன்களைப் பிடிப்பதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படுவதாக நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் ஆய்வுகள் வெளிப்படுத்தியமையினால், குறித்த தொழில் முறைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த, பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்கள்,  பாரம்பரியமாக தம்மால் மேற்கொள்ளப்பட்ட தொழில் முறை தடை செய்யப்பட்டமையினால் வாழ்விதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடல் வளத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதிக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இதுதொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர், கடல் வளத்தை பாதிக்காத வகையில், வாழ்வாதாரத்தை இழந்திருப்போர் தொழிலில் ஈடுபடுவதற்கான சாத்தியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்குவதாக தெரிவித்தார்

Related posts:

சிறந்த கல்வியியாளர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் துணையிருப்போம் - டக்ளஸ் தேவானந்தா!
வரிச் சுமைகளிலிருந்து மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
திருக்கேதீச்சர ஆலயத்தின் பாரம்பரியங்களையும் மகிமையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுதருங்கள் ...

மயிலிட்டி பேச்சியம்மன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்க...
மணலை அகழ்வு தொடர்பில் மீண்டும் விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் ...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற வேலணை பிரதேச சபை வேட்பாளர்களுடனான சந்திப்பும் அற...