ஊழியரின் தாமதத்தினால் ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதம்!
Saturday, August 20th, 2016
விமான சேவை ஊழியர் ஒருவரின் வருகைக்கு தாமதம் ஏற்பட்டதால் ஃபிராங்ஃபர்ட்டில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படவிருந்த ஶ்ரீலங்கன் விமானம் 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் அங்கிருந்து புறப்பட்டுள்ளது.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்திலிருந்த நேற்று பிற்பகல் புறப்படவிருந்த நிலையில், விமான ஊழியரின் தாமதத்தினால், இன்று காலை வரை இந்த விமானத்தை விமான நிலையத்திலேயே நிறுத்திவைக்க நேரிட்டுள்ளது.
ஃபிராங்ஃபர்ட் விமான நிலையம் இரவு வேளையில் மூடப்படுவதால், மீண்டும் திறக்கப்பட்ட பின்னர் குறிப்பிட்ட விமானம் கொழும்பு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்துள்ளது.
Related posts:
பழவகை உற்பத்தியின் அதிகரிப்பு முக்கியமானது - மத்தியவங்கி!
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான நடைமுறையை திருத்த தீர்மானம் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 11 இலட்சத்து 80 ஆயிரத்து 946 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை!
|
|
|


