அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு – வெளியேறி விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் பிரதமர் தெரிவிப்பு!

Saturday, January 15th, 2022

அரசாங்கத்திற்குள் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மிகப் பெரிய அரசியல் தவறு என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதனால், அத்தகையவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு கதவுகள் திறந்தே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

அரசாங்கத்தில் இருந்துக்கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பது மேல் நோக்கி பார்த்து எச்சில் துப்புவதை போன்றது.

அதேபோல் ஊடகங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலுக்கு ஆயுள் குறைவு. நான் 50 வருடங்களாக அரசியலில் அனுபவங்களை பெற்றுள்ளேன்.

எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் அரசியல் கொள்கைகளில் இருந்து விலகிச் சென்றதில்லை எனவும் பிரதமர் மகிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

00



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106