அரசை விட்டு எவரும் வெளியேறலாம் – வெளியில் இருந்தும் எவரும் இணையலாம் – கதவுகள் திறந்தே உள்ளன – நிதியமைச்சர் பஸில் வெளியிட்டுள்ள அறிவிப்பு!
Wednesday, January 12th, 2022
அரசை விட்டு எவரும் வெளியேறலாம். அதேபோல் வெளியில் இருந்து எவரும் அரசுடன் இணையலாம். அரசின் கதவுகள் திறந்தே உள்ளன என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –
கொரோனா வைரஸ் தொற்றால் வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை உடனே நிமிர்த்த முடியாது.
கடந்த அரசும் எமது அரசிடம் ஆட்சியைக் கையளிக்கும்போது நாட்டின் பொருளாதாரம் படுவீழ்ச்சியில் இருந்ததை எவரும் மறந்திடலாகாது.
ஆனாலும் நாட்டின் பொருளாதாரத்தை முன்னகர்த்தும் நடவடிக்கையில் நிதி அமைச்சு ஈடுபட்டுள்ளது.
இதேவேளை அரசுக்குள் இருந்துகொண்டு அரசை விமர்சிப்பவர்கள் உத்தமர்கள் அல்லர். அதேவேளை, அரசை விமர்சிக்கும் எதிரணியினரின் வாய்ச்சவடால்கள் குறித்து பொதுமக்கள் நன்கறிவார்கள் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106