யாழில் மூன்றாவது மலேரியா நோயாளரும் அடையாளம் காணப்பட்டார்!
Tuesday, January 4th, 2022
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மலேரியா நோயாளி ஒருவர் நேற்றையதினம் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், தென்னாபிரிக்காவில் இருந்து அண்மையில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது..
அத்துடன் கடந்த ஒரு மாதத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது மலேரியா நோயாளர் இவராவார்.
முன்னதாக, மல்லாகம் மற்றும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர் மலேரியாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!
நவம்பர் 16 இல் வரலாற்றை மற்றியமைப்போம் - ஈ.பி.டி.பி முக்கியஸ்தர் விந்தன்!
அத்தியாவசிய பொருட்களுக்கான நிவாரணங்களை நுகர்வோருக்கு வழங்குவது தொடர்பில் பிரதமர் தலைமையில் ஆராய்வு!
|
|
|


