2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம் பல்வேறு இடங்களில் ஆரம்பம்!
Monday, January 3rd, 2022
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்றையதினம் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பலவற்றில் இடங்களில் இடம்பெற்றன.
இந்நிலையில் 2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
யாழ் மேல் நீதிமன்ற பதிவாளர் தலைமையில் இடம்பெற்ற சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேம் சங்கர் ,யாழ்ப்பாண மாநகர சபை சுகாதார வைத்திய அதிகாரியின் சிறப்புரைகளும் இடம்பெற்றது.
சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இடம்பெற்ற சத்தியப்பிரமாண நிகழ்வில் யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, யாழ் மாவட்ட நீதிபதி மற்றும் ஏனைய நீதிபதிகள் சட்டத்தரணிகள் மற்றும் யாழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை
2022 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலும் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து சத்தியப்பிரமாணம் இடம்பெற்று மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் முரளிதரன், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, மத குருமார்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருத்தமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106