இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் விமானங்கள் தொடர்பான தரவுகளை பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை!
Sunday, January 2nd, 2022
இலங்கை கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பதிவேற்றம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இவை தொடர்பான தகவல்களை WWW.CCF.GOV.LK இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என அதன் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இலங்கை கடற்பரப்பிற்குள் மூழ்கிய 101 கப்பல்கள் மற்றும் 6 விமானங்கள் தொடர்பான விரிவான தகவல்களை பொதுமக்கள் பெற முடியுமெனவும் அவர் கூறியுள்ளார்.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு!
இன்று சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினம்!
ஓகஸ்ட் மாதம் முதல் கட்டணமீற்றர் பொருத்தாக ஓட்டோக்கள் சேவையில் ஈடுபடமுடியாது - !யாழ்அரச அதிபர் அறிவிப...
|
|
|


