கிரகங்கள் உருவானதை கண்டறிய நாசா முயற்சி!
Friday, August 19th, 2016
அமெரிக்காவின் நாசா மையம் கிரகங்கள் உருவானதை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதற்காக வருகிற செப்டம்பர் 8ம் திகதி புளோரிடாவில் உள்ள கேப் கானவரல் விமான படை தளத்தில் இருந்து ‘அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவவுள்ளது. சூரியனை சுற்றி வரும் பென்னு என்ற குறுங்கோளின் மண் மாதிரியை எடுத்து வந்து ஆய்வு மேற்கொள்ள இந்த ராக்கெட் ஏவப்படுகிறது.
‘ஓசிரிஸ்-ரெஸ்’ எனப்படும் செயற்கைகோள் உடன் பயணிக்கும் ‘அட்லஸ் 5 411’ என்ற ராக்கெட், பூமியில் இருந்து விண்ணில் 2110 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பென்னு குறுங்கோளை 2018ம் ஆண்டு சென்றடையும்.அங்கு தரை இறங்கும் ஓசிரிஸ்-ரெஸ் செயற்கைகோள் பென்னு குறுங்கோளின் மேற்பரப்பில் இருந்து 60 முதல் 2 ஆயிரம் கிராம் எடையுள்ள மண் மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023ம் ஆண்டு பூமிக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related posts:
டுவிட்டரில் அறிமுகமாகும் மற்றுமொரு வசதி!
பாம்புகளை விட குதிரைகளே ஆபத்தானவை : புதிய ஆய்வில் தகவல்!
வளிமண்டலத்தில் அதிகரிக்கிறது காபனீரொட்சைட்: வெளியானது அதிர்ச்சி தகவல்!
|
|
|


