சினோபோர்ம் தடுப்பூசிக்காக செலவிட்ட தொகையை திருப்பிச் செலுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிப்பு!

Wednesday, December 29th, 2021

சினோபோர்ம் தடுப்பூசி கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் செலவிட்ட பணத்தை திருப்பி செலுத்துவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணங்கியுள்ளது.

இந்த தகவலை மருந்து பொருட்கள் உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று உறுதிபடுத்தியுள்ளார்.

இதனடிப்படையில் 85 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி கொள்வனவுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை டொலர் நெருக்கடியை எதிர்நோக்கும் நேரத்தில் இந்த தொகையானது மிகவும் அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார்..

அரசாங்கத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், தடுப்பூசி அளவுகள் வாங்கும் போது முறைகேடு நடந்ததாகவும் பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வந்த நிலையில் இந்த நடவடிக்கை நல்ல பதிலடியாக அமைந்துள்ளது எனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106