மூச்சுத்திணல் – பறிபோன 3 மாத குழந்தையின் உயிர் – யாழ் இணுவிலில் சோகம்!
Thursday, December 23rd, 2021
யாழ்ப்பாணத்தில் மூச்சுத்திணறல் காரணமாக மூன்றரை மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.
யாழ்ப்பாணம் இணுவில் தெற்கைச் சேர்ந்த மூன்றரை மாத ஆண் குழந்தையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
நேற்று (22) அதிகாலை தாய்ப்பால் குடித்த குழந்தை திடீரேன மூச்சடங்கி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தை உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளர் பதவியேற்பு!
யுத்தத்தில் இறந்த அனைவரும் ஒரே இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும் – சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை தூக்...
தொடர்ச்சியான இரத்து மற்றும் தாமதங்கள் - பயண இடையூறுகளால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு...
|
|
|


