புதிதாகத் திருமணமாகி குறைந்த வருமானம் பெறும் தம்பதியருக்குக் காணிகள் – காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை!
Wednesday, December 22nd, 2021
புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு 2000 காணிகளை பகிர்ந்தளிக்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனடிப்படையில் காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் வரும் காணிகள், புதிதாக திருமணமான குறைந்த வருமானம் பெறும் தம்பதியினருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என காணி அமைச்சின் செயலாளரான ஆர்.டி.ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விண்ணப்பங்கள் எதிர்வரும் ஜனவரி மாதம்முதல் அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கின் மீள் குடியேற்றத்திற்கு வடமாகாணசபை இன்றுவரை துளியளவேனும் உதவவில்லை - அமைச்சர் ரிஷாத் பதியுதீ...
உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளுக்கு நியாயம் கிடைக்க அனைத்துத் தரப்பினரும் அணி திரள வேண்டும் : சமூக ந...
தனியான வளாகமாக மாறுகிறது வவுனியா பல்கலைக்கழகம்!
|
|
|


