யாழ்ப்பாணத்தில் இரு இளைஞர்கள் மீது கத்திக் குத்து!
Monday, April 16th, 2018
நெல்லியடி பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இரு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலை இலக்கத் தகடுகள் அற்ற உந்துருளியில் வருகை தந்த இருவர் நேற்று (15) மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மந்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
வடமராட்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளால் இன்று போராட்டம்!
இலங்கையில் கொரோனா உயிரிழப்பு 9ஆக அதிகரிப்பு !
இவ் ஆண்டின் முதல் காலாண்டில் ஆடைத் தொழிற்துறையின் வருமானம் 10.8 சதவீத வளர்ச்சி!
|
|
|


