நாடாளுமன்ற கைகலப்பு விவகாரம் – விசேட குழுவை நியமித்தார் சபாநாயகர்!
Monday, December 6th, 2021
நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கைகலப்பு குறித்து விசாரிக்க விசேட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.
அத்துடன் கௌரவத்தை பாதுகாக்க நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்புடன் செயற்படவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து ஆராய சிரேஷ்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மஹிந்த யாப்பா அபேவர்தன கூறியுள்ளார்.
அதற்கு அனைவரும் ஒத்துழைத்து நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பேண நடவடிக்கை எடுக்க வேண்டும்என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கேட்டுக்கொண்டார்.
Related posts:
வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 539 பேர் நாடு திரும்பினர்!
யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
ஒரு சில உயர் பெறுபேறுகளை வைத்துக்கொண்டு மாவட்டம் கல்வி நிலையில் உயர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடிக்க மு...
|
|
|


