யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுப்பு!
Sunday, May 30th, 2021
அரசாங்கத்தின் தடுப்பூசி திட்டத்தின் கீழ் இன்று யாழ்ப்பாணம் உட்பட 6 மாவட்டங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் 7 இடங்களில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டிலும், அவர்களது கண்காணிப்பிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாணத்தில், PMCU கைதடி, அரியாலை பிரப்பனை குளம் மஹாமாரி அம்மன் திருமண மண்டபம், ஸ்ரீ நாரதா பாடசாலை, DH கோப்பாய், .J/வடஹிந்து பெண்கள் பாடசாலை, DH சங்கானை, அமுதா சுரபி மண்டபம் ஆகிய இடங்களில் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டிரந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வானூர்தி அதிகார சபை விடுத்துள்ள எச்சரிக்கை!
கப்பலில் தீயைக் கட்டுப்படுத்திய இலங்கை, இந்தியா தரப்பினருக்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு!
பொது மக்கள் 1958 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் - இலங்கை ப...
|
|
|


