கணனி விளையாட்டுகளை தடை செய்ய கல்வி அமைச்சரிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை!
Thursday, December 2nd, 2021
சிறுவர்களின் மனதை சிதைக்கும் கணனி விளையாட்டுகளை தடை செய்ய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் இணைந்து அரசாங்கம் செயற்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த கணி விளையாட்டுகள் மூலம் பல சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி இவ்வாறான கணனி விளையாட்டுக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
00
Related posts:
பலாலியிலிருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி விமான சேவை!
சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!
கடந்த மூன்று வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூ...
|
|
|


