சவுதி அரேபியா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு!
Tuesday, June 29th, 2021
சவுதி அரேபியா, கட்டார், பஹ்ரைன், குவைட், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்குச் சென்றவர்கள் இலங்கைக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் சென்றவர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் 13ஆம் திகதி வரை இந்தத் தடை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
முல்லைக் கடற்கரையில் மர்மப்பொருள் வெடிமருந்து என்று சந்தேகம்?
மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு புதிய நீதியரசர் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு!
வதந்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|


