சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை – எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!
Thursday, December 2nd, 2021
சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை திறப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஜக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை சபூகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை விற்பனை செய்வதற்கு எந்தவித ஏற்பாடும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்ததுடன், இதனை கொள்வனவு செய்வதற்கு எவரும் முன்வரவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!
இறக்குமதி கட்டுப்பாடு படிப்படியாக நீக்கப்படும் - IMF உடன்படிக்கை நாளை நாடாளுமன்றுக்கு – ஜனாதிபதி ஜனா...
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று காலை ஆரம்பம்!
|
|
|


