புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமனம்!
Friday, November 26th, 2021
புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் எல்.எம்.டி தர்மசேன நியமிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பதவியில் பணியாற்றிய பீ. சனத் பூஜித இன்று 26 ஓய்வு பெறுவதை முன்னிட்டு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக திரு.எல்.எம்.டி.தர்மசேன கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.
சனத் பூஜித 2017 ஆண்டு நவம்பர் மாதம் முதல் பரீட்சை ஆணையாளர் நாயகமாக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவியிலிருந்து சனத் பீ புஜித ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலிகாமம் கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இளைஞர் அணி உதயம்!
ஜனநாயகத்தை நேசிப்பவர் ரணில் - பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப்பு!
நாட்டில் 18 நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் – நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை!
|
|
|


