மக்களே அவதானம் – எச்சரிக்கிறது வளிமண்டலத் திணைக்களம்!
Thursday, August 18th, 2016
நாட்டில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான சூழல் காணப்படுவதால் கரையோரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மற்றும் கடற்றொழிலில் ஈடுபடுகின்றவர்கள் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்வதாக வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது –
நாடளாவிய ரீதியில் கடற்கரைப்பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கான அதிகளவு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதனடிப்படையில் மேற்கு, வடமேற்கு,தெற்கு மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அதிகளவு மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
கடற்கரைப்பகுதிகளில் மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 70 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக் கூடிய சூழல் காணப்படுவதனால் கொழும்பிலிருந்து மாத்தறை வழியாக காலி வரையான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். அத்தோடு மேற்கிலிருந்து தென்மேற்குத் திசைக்கு மணித்தியாலத்துக்கு 35 தொடக்கம் 40 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக் கூடும்.
கடல்சார்ந்த பகுதிகளான புத்தளம் தொடக்கம் திருகோணமலை மன்னார், காங்கேசன்துறை வரையான, அம்பாந்தோட்டை தொடக்கம் மட்டக்களப்பு ஊடான பொத்துவில் பகுதியில் மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடிய சூழல் காணப்படுகின்றது.
இதனால் தெற்கு, கிழக்கு மற்றும் வடக்கு கடற்பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக இருக்க வேண்டும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50முதல்-55 கிலோமீற்றர் வரையில் காற்று வீசக்கூடும். தற்காலிகமாக நிலைக்கொண்டுள்ள குறித்த தாழமுக்க பலத்த சுழல் காற்றாக மாறுவதற்கான சூழல் காணப்படுகின்றது. இதனால் இடியுடன் கூடிய மின்னலும் சில பகுதிகளில் ஏற்படலாம். எனவே மக்கள் சீரற்ற காலநிலையினால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106
Stack trace:
#0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require()
#1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array)
#2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array)
#3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '')
#4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...')
#5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...')
#6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...')
#7 {main}
thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106