வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று!
Monday, November 22nd, 2021
2022 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இம்மாதம் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அதனைத்தொடர்ந்து, வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகி, ஏழு நாட்களாக நடைபெற்ற நிலையில், இன்று மாலையுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், இன்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து நாளை 23 ஆம் திகதிமுதல் குழு நிலையிலான விவாதம் ஆரம்பமாகவுள்ளது.
இந்த விவாதம், சனிக்கிழமை உள்ளடங்கலாக டிசம்பர் 10 ஆம் திகதி வரை 16 நாட்கள் இடம்பெறவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, வரவு – செலவுத் திட்ட மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(812): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(745): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106