சீரற்ற காலநிலை தொடர்வதால் டெங்கு பரவும் வேகமும் அதிகரிப்பு!

Thursday, November 18th, 2021

டெங்கு காய்ச்சலினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான வானிலையினால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ஜீ. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக நாளொன்றில் 5 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது ஒரு நாளில் 25 இற்கும் அதிகமானவர்கள் அனுமதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, டெங்கு நோய்ப்பரவல் தொடர்பில் பெற்றோரை அதிக கவனம் செலுத்துமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related posts:

இரணைதீவு மக்களின் மீள்குடியேற்றமானது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது மக்கள் நலன் சார் பணிக...
பாதாள உலகக் குழுக்களின் துப்பாக்கிகளை கைப்பற்றும் நோக்கில் இரண்டு மாத கால விசேட நடவடிக்கை - பொலிஸார...
மத்திய வங்கி மோசடி - ஏப்ரல் 21 தாக்குதல், மதுபானசாலை அனுமதி பத்திரங்களைப் பெற்றுக் கொண்டவர்களின் பட...