ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி!
Tuesday, November 16th, 2021
உள்ளூர் ஊடகவியலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், உத்தேச ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் விழாவை, தெரிவு செய்யப்பட்ட ஆறு பிரிவுகளின் கீழ் நடத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் கீழ், தொலைக்காட்சி, வானொலி, அச்சு ஊடகம், இணையத்தளங்கள், பாடசாலை ஊடகங்கள் மற்றும் ஊடக ஆராய்ச்சி ஆகிய ஆறு துறைகளை உள்ளடக்கியதாக, சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் 2021 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட படைப்புகளுக்காக விருதுகள் வழங்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ஊடக விருது வழங்கும் திகதி அல்லது விண்ணப்பங்களை கோருவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..
Related posts:
அரச வைத்தியர்களின் போராட்டம் ஆரம்பம்!
செயற்திட்டங்களின் பெறுபேறுகளை அறிந்துகொள்வதற்காக பிரதேச செயலகங்களில் செயற்பாட்டுப் பணியகம் நிறுவப்பட...
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் - மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மைய...
|
|
|


