நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி!
Friday, November 12th, 2021
இந்தியாவில் இருந்து நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்துள்ளார்.
வரவு – செலவுத் திட்டத்திற்கு அனுமதியை பெறுவதற்காக இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், கூட்டெருவை இலவசமாக விநியோகிக்கவும் அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
தபால் மூல வாக்காளர்களின் 560,000 விண்ணப்பங்கள் செல்லுபடி!
உரிய காலத்தில் பயிர்ச்செய்கையை மேற்கொள்ள மானிய உரம்!
159,92,096 பேர் வாக்களிக்கத் தகுதி - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
|


